சினிமா

நீங்க யாருனு எனக்கு தெரியும், ஆவேசமாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலக்ஷ்மி!

Summary:

varalakshmi talk about marriage rumours

தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு ஜோடியாக போடா போடிஎன்ற  படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பின்னர் பாலா இயக்கத்தில் இவர் நடித்த ''தாரை தப்பட்டை'' படத்தின் மூலம் இவர் பெரும் பிரபலமானார்.

அதை தொடர்ந்து அவர் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர். சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் நடித்தார்.

மேலும் வரலட்சுமியும், விஷாலும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தது.ஆனால் அது உண்மை இல்லை நாங்கள் நண்பர்கள்தான் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இதற்கிடையே விஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் திருமணம் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் திருமணம் எனவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. 

அதற்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த வரலட்சுமி சரத்குமார், வருடக் கடைசியில் வழக்கம்போல சில வேலைக்கு ஆகாதவர்கள் எனக்கு திருமணம் ஆகப்போவதாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. இங்குதான் இருக்கப்போகிறேன். வதந்தி பரப்புவர்களை பின்னாலேயே உதைக்கப் போகிறேன். எனவே அடுத்த முறை முயற்சி செய்யுங்கள். நீங்கள் யாரென்று எனக்கு தெரியும். என்னை வீழ்த்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.



 


Advertisement