தமிழகம் சினிமா

இதற்கு ஏன் வெட்கம்!! மார்பகம் குறித்து வெளிப்படையாக பேசிய வரலக்ஷ்மி!! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

varalakshmi talk aboust chest problems

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகளான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் கதாநாயகியாக அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான சர்க்கார், மாரி 2 , சண்டக்கோழி 2 போன்ற மிக பெரிய படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்திய மார்பக புற்று நோய் விழிப்புணர்வு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர்  பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக தனது சகோதர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அது குறித்து பேசி தீர்வு காண வேண்டும். அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.

புற்று நோய் என்பது முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒரு நோய்தான். மார்பகம் என்பது உடலின் ஒரு பாகம் தான். ஆண்களுக்கு உள்ளதுபோல நமது உடலிலும் இருக்கக்கூடியதுதான். எனவே மார்பக நோய்கள் குறித்து பேச பெண்கள் வெட்கப்படுதல், கூச்சப்படுதல் கூடாது. தவறாமல்  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.என கூறியுள்ளார்.
 


Advertisement