சினிமா

அவரிடம் வாய்விட்டு கேட்டும் தரவில்லை. புலம்பும் நடிகை வரலக்ஷ்மி!

Summary:

Varalakshmi sarathkumar talks about ajith pink remake movie

அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை என வரலட்சுமி சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கின்றார் தல அஜித். படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கின்றார்.

இந்நிலையில் பிரபல நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலக்ஷ்மி சரத்குமார் அஜித்தின் பிங்க் ரீமேக் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டும் அவர்கள் தரவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலக்ஷ்மி. மேலும், சண்டக்கோழி 2 , மாரி 2 போன்ற படங்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் நடிக்கின்றனர். இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.


Advertisement