சினிமா

விழிப்புணர்வுகாக இப்படியா செய்வது? நடிகை வரலட்சுமி வெளியிட்ட புகைப்படம்! முகம்சுளித்து விளாசும் நெட்டிசன்கள்!

Summary:

நடிகை வரலட்சுமி மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையையும் பெற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கொரோனோ பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர் சிறிது சிறிதாக தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு தற்போது நிலைமை ஓரளவிற்கு சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து மக்களுக்கு கொரோனாவில்  இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நபர் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் எல்லா இடங்களிலும் இன்னும் கொரோனா அதிகமாக உள்ளது. பொறுப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் என்ன ஒரு கீழ்த்தரமான பதிவு, உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேறு எதுவும் கிடையாதா? என தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement