சினிமா

நடிகை வரலட்சுமியா இது! சிறுவயதில் என்ன ஒரு அழகு - வைரலாகும் புகைப்படங்கள்.

Summary:

Varalakshmi childhood photos

பிரபல தென்னிந்திய நடிகரான சரத்குமாரின் மகள் வரலெட்சுமி, போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். 

மேலும் இவர் சண்டகோழி 2, சர்கார் போன்ற திரைப்படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக நீயா இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சிறந்த நடிகை என்பதை தாண்டி தொகுப்பாளினியாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் புதிய அவதாரம் எடுத்தார். மேலும் வரலட்சுமி தற்போது கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து, வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன்  த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது வரலட்சுமி தனது தந்தையுடன் இருக்கும் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வரலட்சுமி சிறுவயதில் என்ன ஒரு அழகு என கூறி வருகின்றனர்.

View this post on Instagram

Actress ##varalakshmisarathkumar Rare Photos

A post shared by Behind Talkies (@behindtalkies) on


Advertisement