சினிமா

என்னது.. முகப்பரு நீங்கி லாஸ்லியா பளபளனு ஜொலிக்க வனிதா சொன்ன இந்த டிப்ஸ்தான் காரணமா??

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வன

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் எதனையும் பொருட்படுத்தாமல் அடுத்ததாக முன்னேறி வருகிறார். மேலும் வனிதாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி வனிதா தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள் கொடுத்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் முகப்பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள வடுக்கள் நீங்குவதற்கான டிப்ஸ் கொடுத்துள்ளார். அப்பொழுது அவர் இந்த டிப்ஸை பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தான் லாஸ்லியாவுக்கு கூறியதாகவும், மேலும் அது அவருக்கு உபயோகமாக இருந்ததாக கூறி லாஸ்லியா நன்றி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதில் அவர், நன்கு சுத்தமான மிக்சி ஜாரில் ஃப்ரெஷ் புதினா இலைகளை அரைத்து, முகத்தில் தடவ வேண்டும். மேலும் தேவைப்பட்டால்  தண்ணீர் அல்லது பன்னீர் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் அதனை நீங்களே முகத்தில் தடவ வேண்டாம். வேறு யாராவது முகம் முழுவதும் நன்கு அப்ளை செய்யவேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம் என தெரிவித்துள்ளார்.

 


Advertisement