சினிமா

திடீரென ட்விட்டரில் இருந்து விலகிய நடிகை வனிதா! ஏன் தெரியுமா? அவரே அளித்த அதிரடி விளக்கம்!

Summary:

Vanitha releave from twitter

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபலமானவர் வனிதா. அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் தனியாக யூடியூப் சானல் ஒன்றை தொடங்கி,  அதில் சமையல் மற்றும் அழகு குறிப்புகளை கூறிவந்தார். இந்நிலையில் நடிகை வனிதா கடந்த மாதம் 27ம் தேதி இயக்குனர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வனிதாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். 

மேலும் பீட்டரின் முதல் மனைவி ஹெலன்,  வனிதா மற்றும் கணவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து, அவருக்கு எதிராக பேட்டியும் கொடுத்தும் வந்தார். இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யாதேவி, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் எலிசபெத்திற்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் வனிதா ட்வீட்டரில் மிகவும் ஆவேசமாக பேசிவந்தார். ஆனாலும் தொடர்ந்து வந்த மோசமான விமர்சனங்களால் 
தற்போது வனிதா ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார். 

இதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்த அவர் கூறுகையில், ட்விட்டர் முழுவதும் தனிப்பட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு போலியான மனிதர்களாக உள்ளனர். மேலும் மிக குறைவான அளவில் மட்டுமே நேர்மையானவர்கள் உள்ளனர். அதிலும் பெரும்பாலான திரைப்பிரபலங்கள் தன்னை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்ள தந்திரமாக செயல்படுகின்றனர்.

மேலும் எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது கலாச்சாரம், பண்பாடு கிடையாது. போலியான நாடகங்கள் மற்றும் அருவருக்கத்தக்க ட்ரெண்டிங்கினால் நான் மிகவும் அப்செட்டாக இருக்கிறேன். நான் எப்பொழுதும் போலியாக இருந்ததில்லை. இனி இருக்கவும் மாட்டேன்.இதுபோன்ற விஷயங்களிலிருந்து விலகி தனியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

 


Advertisement