சினிமா வீடியோ

நான் நம்பி ஏமாந்துட்டேன்! கோவாவில் என்ன நடந்துச்சு தெரியுமா? கதறி அழுதவாறு உருக்கமாக நடிகை வனிதா வெளியிட்ட வீடியோ!

Summary:

நடிகை வனிதா கணவர் பீட்டர் பால் குறித்தும், கோவாவில் என்ன நடந்தது குறித்தும் கண் கலங்கியவாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகையும், நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளுமான வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நெட்டிசன்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சிலரால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு பேசுப்பொருளானார். 

ஆனாலும் எதற்கும் அசராமல் தன்னைக் குறித்து தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலளித்து வந்த வனிதா தற்போது தனது சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். 

 இந்நிலையில் சமீபத்தில் வனிதா தனது பிறந்தநாளை கொண்டாட  கணவர் பீட்டர் பால் மற்றும் இரு மகள்களுடன் கோவாவிற்கு சென்றார். அங்கு மிகவும் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வந்த அவர்கள் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் கோவாவிலிருந்து திரும்பும்போது பீட்டர் பால் பயங்கர  குடிபோதையில் தகராறு செய்ததாகவும், அதனை  பொறுத்துக்கொள்ள முடியாமல் வனிதா அவரை விரட்டி விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர் பீட்டர் பால் குறித்தும், கோவாவில் என்னதான் நடந்தது என்பதைக் குறித்தும், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை எனவும் கண்ணீருடன் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement