சினிமா

மீண்டும் காதல்! நடிகை வனிதா வெளியிட்ட ஷாக் தகவல்! அதற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா??

Summary:

மீண்டும் காதல் என நடிகை வனிதா வெளியிட்ட பதிவு குறித்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னரானார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 3 மாதங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளானது. பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது இன்ஸ்டாகிராமில் மீண்டும் காதல், இப்போ சந்தோசமா? என்று பதிவிட்டு நடிகை உமா ரியாஸ்க்கு டேக் செய்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் என்னது! வனிதா மீண்டும் காதலில் விழுந்துள்ளாரா என சந்தேகம் கொண்டு அவரை மோசமாக விமர்சனம் செய்தனர்.

மீண்டும் காதலில்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா?' நடிகை வனிதாவின் திடீர்  பதிவால் பரபரப்பு! | Is Vanitha Vijayakumar love again? - Tamil Filmibeat

இந்த நிலையில் அவர் ஏன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது நடிகை வனிதா சமீபத்தில் நடிகை உமா ரியாஸ் நடத்தும் யூடுயூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் வனிதாவிடம் அவரது சொந்த வாழ்க்கையை குறித்த பல கேள்விகளை கேட்டுள்ளார். பின்னர் உமா ரியாஸ் வனிதாவை மீண்டும் காதலில் விழுந்து விட்டேன் என சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட கூற, அந்த சவாலை ஏற்றே வனிதா அவ்வாறு செய்துள்ளதாக கூறியுள்ளார்.


 


Advertisement