அவ நல்லா கொடுப்பா.. நம்பிக்கை இருக்கு! வனிதா போட்ட பதிவு! ஓ.. அது இந்த புது ஜோடிக்காகதானா.!

அவ நல்லா கொடுப்பா.. நம்பிக்கை இருக்கு! வனிதா போட்ட பதிவு! ஓ.. அது இந்த புது ஜோடிக்காகதானா.!


vanitha-karma-post-for-producer-viral

பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹாலட்சுமி. அவர் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் தேவதையை கண்டேன் என்ற தொடரில் நடித்தபோது நடிகர் ஈஸ்வருடன் தகாத உறவில் இருப்பதாக அவரது மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து பெரும் சர்ச்சை கிளம்பியது.

அதனைத் தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த மஹாலட்சுமி அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர், சிலர் மோசமாக விமர்சனமும் செய்து வருகின்றனர். ரவீந்தர் சமூக வலைதளங்களில் டிவி நிகழ்ச்சிகள், போட்டியாளர்களை விமர்சனம் செய்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் அவர் நடிகை வனிதா பீட்டர்பாலை 3-வது திருமணம் செய்த போது அவரது முதல் மனைவிக்கு ஆதரவாக இருந்து வனிதாவுடன் சண்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து வனிதா என்ன சொல்வார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். கர்மா யாரையும் சும்மா விடாது. அவளுக்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும். அவளை நான் முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் வனிதா ரவீந்தரை குறிப்பிட்டுதான் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.