சினிமா

நயன்தாராவிற்கு ஒரு நியாயம்! வனிதாவிற்கு ஒரு நியாயமா? கொந்தளித்த ரசிகர்கள்!! அதுவும் ஏன்னு பார்த்தீர்களா?

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இந்த நிகழ்ச

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இந்த நிகழ்ச்சியில் பல விமர்சனங்களை சந்தித்த அவர் பின்னர் மூன்றாவது திருமணம், விவாகரத்து என பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். ஆனாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் வனிதா அடுத்தடுத்து படங்களில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் வனிதா பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதனைக் கண்ட ரசிகர்கள் வனிதாவிற்கு 4வது திருமணமா? என கேள்வியெழுப்பி வந்துள்ளனர். மேலும் வனிதா பவர்ஸ்டாருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோஷூட் புகைப்படங்களும் பரவியது. பின்னர் இது பிக்கப் டிராப் என்ற படத்திற்கான பிரமோஷனுக்கான போஸ்டர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் வனிதாவை மோசமாக விமர்சனம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து வனிதா ரசிகர்கள், ராஜாராணி படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா ஆர்யா திருமணம் செய்வது போன்ற போஸ்டர்கள் அப்போது வெளியிடப்பட்டு வைரலாக்கப்பட்டது.

ஆனால் அதனை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனையே தற்போது வனிதா செய்தால் விமர்சனம் செய்வதா? என கேள்வி எழுப்பி வந்துள்ளனர். இந்நிலையில்  வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜாராணி பட போஸ்டரை பகிர்ந்து, இதனை நான் மறந்துவிட்டேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து சகோதரிகளுக்கும் மிக்க நன்றி என கூறியுள்ளார்.


Advertisement