எப்போதும் என் முதல் காதல் நீதான்.! உருகிய நடிகை வனிதா! ஏன்? யாருக்காக தெரியுமா??

எப்போதும் என் முதல் காதல் நீதான்.! உருகிய நடிகை வனிதா! ஏன்? யாருக்காக தெரியுமா??


Vanitha birthday wishes ro son srihari

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வெளிப்படையான கருத்துக்களால் மோசமான விமர்சனங்களை சந்தித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று பேசுப்பொருளானார்.

பின்னர் தற்போது வனிதா யூடியூப் வீடியோக்கள், படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார். நடிகை வனிதாவிற்க்கும் அவரது முதல் கணவர் ஆகாஷ்க்கும் மூத்த மகனாகப் பிறந்தவர் விஜய் ஸ்ரீஹரி. வனிதா கணவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் ஸ்ரீஹரி தனது தந்தை மற்றும் தாத்தா விஜயகுமாருடன் வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் ஸ்ரீஹரி அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னுடைய முதல் காதல் என்றும் நீதான். அன்பு எப்போதும் அளவற்று இருக்க வேண்டும், தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்புதான் தூய்மையானது.

ஒரு அம்மாவாக இது எனது 21வது பிறந்தநாள். என் முதல் மகன் ஸ்ரீஹரி பிறந்து 21 ஆண்டுகள் ஆகியுள்ளது. என்னுடைய அழகான திறமையான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் நீதான் என் லட்டு. உன் கனவுகள் அனைத்தும் நிறைவேற கடவுள் உன்னை ஆசீர்திக்கட்டும் என கூறியுள்ளார்.