சினிமா

அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை.! எப்போது தெரியுமா.? அதிகாரபூர்வ அறிவிப்பு

Summary:

அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை.! எப்போது தெரியுமா.? அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படம் தீபாவளி அல்லது கிறிஸ்மஸ் ஆகிய இரண்டு தினங்களில் ஒன்றில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இப்படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் தல அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்தநிலையில், வலிமை படத்தின் முதல்பார்வை நாளை வெளியாகும் நிலையில், படம் அடுத்த 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தீபாவளிக்கு வலிமை படம் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தயாரிப்பாளரின் அறிவிப்பு ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement