"இங்க இருந்து காப்பியடிக்க வேணாம்.. இங்க வந்தே எடுங்க" அட்லீயை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
வலிமை, இந்தியன் 2 பட குழந்தை நட்சத்திரத்தின் குடும்பத்தையே உருக்குலைத்த கொடிய கொரோனா! கண்கலங்க வைக்கும் துயரம்!!
வலிமை, இந்தியன் 2 பட குழந்தை நட்சத்திரத்தின் குடும்பத்தையே உருக்குலைத்த கொடிய கொரோனா! கண்கலங்க வைக்கும் துயரம்!!

ராயபுரத்தை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி யாஸ்மின். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் யாஸ்மின் தற்போது மூன்றாவது குழந்தைக்காக கர்ப்பமாக இருந்துள்ளார். மேலும் முபாரக்கின் 10 வயது மகன் ஆலம். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திரமாக உள்ளார். அவர் தற்போது வலிமை படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் கமலின் பேரனாக நடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் ஆலம் குடும்பத்தினர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படுக்கை வசதி இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த ஆலமின் தாயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் அவர்கள் பணத்திற்காக பெரிதும் கஷ்டப்பட்ட நிலையில், இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி கிட்டத்தட்ட 9லட்சம் கிடைத்துள்ளது. மேலும் அதனை கொண்டு சிகிச்சையும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் யாஸ்மினுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து ஆலமிற்கு தெரியாது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வரும் முபாரக் வலிமை மற்றும் இந்தியன் 2 பட தயாரிப்பாளர்களிடம் ஆலமின் சம்பள பாக்கியான மூன்று லட்சத்தை தந்து உதவும்படி உதவி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.