விவேக் கடைசியாக சொன்னதையே நானும் வலியுறுத்துவேன்! நடிகர் வையாபுரி உருக்கமான சபதம்!!

விவேக் கடைசியாக சொன்னதையே நானும் வலியுறுத்துவேன்! நடிகர் வையாபுரி உருக்கமான சபதம்!!


Vaiyapuri talk about vivek last request

தமிழ்  சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார். இவரது மரணம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நடிகர் விவேக் கடந்த 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் தன்னை போல அனைவரும் எந்த அச்சமுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆனால்  மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் அவர் உயிரிழந்தார் என பல தகவல்கள் பரவியது.

Vaiyapuri

ஆனால் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்தது. இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் வையாபுரி பேசுகையில், விவேக் கடைசியாக கொடுத்த பேட்டியில் கூட 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்ற கருத்தை கூறிவிட்டு சென்றார். அதனால் நான் இனிமேல் எங்கு பேசினாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என விவேக் சொன்னதை வலியுறுத்தி பேசுவேன் என்று கூறியுள்ளார்.