நேரில் வருகிறேன்; தங்க பேனா பரிசளிக்கிறேன்.! கவிஞர் வைரமுத்து பாராட்டு.! யாருக்கு தெரியுமா??

நேரில் வருகிறேன்; தங்க பேனா பரிசளிக்கிறேன்.! கவிஞர் வைரமுத்து பாராட்டு.! யாருக்கு தெரியுமா??


Vairamuthu wish student nandhini

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தான் பெற்ற தங்க பேனாவை பரிசாக அளிப்பதாக கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இந்த தேர்வில் திண்டுக்கல் அரசு பள்ளியை சேர்ந்த மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். 

இவருக்கு சிஏ படிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார். மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் பலரும் அந்த மாணவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் , "ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது.
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்.
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்.
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! என குறிப்பிட்டுள்ளார்.