திருப்பி அளிக்கிறேன்.. கிளம்பிய சர்ச்சைகள்! கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

திருப்பி அளிக்கிறேன்.. கிளம்பிய சர்ச்சைகள்! கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!



vairamuthu announcement about return the onv award

ஞானபீட விருது பெற்ற மலையாள பெரும் கவிஞர் ஓ.என்.வி குறுப். கடந்த 2017ம் ஆண்டு அவரது பெயரால் ஓ.என்.வி இலக்கிய விருது நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மூத்த மலையாள படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல்முறையாக மலையாளி அல்லாத இலக்கியவாதியான கவிஞர் வைரமுத்துக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு நடிகை பார்வதி மற்றும் சின்மயி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஓ.என்.வி கலாச்சார மையம் வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் தனக்கு வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட ஓஎன்வி விருதை தான் திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் ஓ.என்.வி விருது வழங்கப்படுவது மறுபரீசிலனைக்கு உள்ளாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதாய் அறிந்தேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று எண்ணுகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது என தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெற தவிர்க்கவே விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன். மேலும் மலையாள மண்மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட அன்பின் அடையாளமாக எனது பரிசுத்தொகையாக ரூ.2 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன் எனவும் கூறியுள்ளார்.