தமிழகம் சினிமா

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. அசத்தலான கெட்டப்பில் வடிவேலுவின் கலகலப்பான வீடியோ!

Summary:

Vadivelu enters into twitter

வைகைப் புயல் வடிவேலு இல்லாமல் இங்கு ஒரு நாளும் ஓடுவதில்லை. சமூகவலைத்தளங்களைத் திறந்தாலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து இருக்கிறார் வடிவேலு என்றே சொல்லலாம். 

சமீபத்தில் உலக அளவில் ப்ரே பார் நேசமணி என்ற ஹேஷ்டாக் ட்ரண்டிங் ஆன போது கூட ட்ரண்டிங்னா என்ன என்று வெள்ளந்தியாக கேட்ட மனிதர் வடிவேலு. யாரை, எப்படி, எந்த விஷயத்திற்கு கலாய்க்க வேண்டுமானாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தும் ஒரே நபர் வடிவேலு தான்.

இத்தனை நாட்கள் மீம்ஸ்கள் மூலமே ரசிகர்களுக்கு காட்சி தந்த வைகைப்புயல் தற்போது நேரடியாகவே ட்விட்டரில் குதித்துவிட்டார். அவருடைய நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணக்க முதல்முறைய ட்விட்டரில் தனக்கென ஒரு அக்கவுண்டை திறந்துள்ளார்.

அதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாக தானே ஒரு வீடியோ பதிவினையும் அவர் வெளியிட்டுள்ளார். ராஜா போல் வேடமனிந்த அந்த வீடியோவில், ரசிகர்களின் அன்பை ட்விட்டர் வாயிலாக பறிமாறவும் ரசிகர்களை அடிக்கடி இதன் வாயிலாக சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement