கோவிலில் அண்ணன் வடிவேலுவிடம் காலில் விழுந்து ஆசி வாங்கிய தங்கை... நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

கோவிலில் அண்ணன் வடிவேலுவிடம் காலில் விழுந்து ஆசி வாங்கிய தங்கை... நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!


vadivelu-action-at-temple

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் நடிகர் வடிவேலு. இவருக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இறுதியாக இவர் நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படத்தால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இதன் பின் தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை சென்றுள்ளார்.

Vadivelu

இவர் கோவிலுக்கு வந்த தகவலறிந்த பக்தர்கள் பலரும் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கு கோவிலில் துப்புரவு பணியில் ஈடுபட்டுருந்த ஒரு பெண் தயங்கியபடி அவரின் காலில் விழுந்து வணங்கவே, உடனடியாக அந்த பெண்ணை வடிவேலு நன்றாக இருங்கள் என்று வாழ்த்தினார். 

மேலும்,  "வாம்மா நீ தான் என் தங்கச்சி" என கூறியபடி தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த செயல் ரசிகர்களை நிகழ்ச்சியடைய செய்துள்ளது.