சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னணி நடிகருடன் இணையும் வைகை புயல் வடிவேலு!

Summary:

Vadivalu latest news

தமிழ் சினிமாவில் நகைசுவை நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது.தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரையும் மகிழ்வித்தவர். 2011 ஆம் ஆண்டுக்கு முன்புவரை வெளிவந்த பெரும்பாலான படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர்.

அதன் பிறகு , 2011ல் அரசியலில் ஈடுபட்டார்.அதன் பிறகு  அவருக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது.2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் எதிர்பாராத விதமாக  அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. அதுவே,  வடிவேலுவின்  திரைவாழ்க்கை முற்றிலும் சரிய காரணமாக அமைந்தது. 

அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு புலிகேசி இரண்டாம் பாகம் பிரச்சனையால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு நடிக்காமல் இருந்தார் வடிவேலு. மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெர்சல் படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் காமெடி நடிகராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Advertisement