சினிமா

வடசென்னை 2 வெளியாவதில் தாமதம் ஏன்? இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்!

Summary:

Vada chennai2 varimaran

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கக்கூடிய சிறந்த இயக்குனர். இவர் முதன்முதலில் நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும் இவர் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி சிறந்த தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை, அசுரன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வடசென்னை 2 குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது இன்றை காலக்கட்டத்தில் வடசென்னை 2 படம் இயக்குவது கடினம், அதுமட்டுமின்றி பட்ஜெட்டும் அதிகமாகும்.  எனவே வருங்காலத்தில் அந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். 


Advertisement