புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வசூல் சாதனையில் உலகையே உலுக்கிய வடசென்னை திரைப்படம்! எவ்வளவு வசூல் தெரியுமா?
இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் வட சென்னை. பொல்லாதவன், ஆடுகளம் என மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு திரை அரங்குகளில் கூட்டம் களைகட்டுகிறது.
முன்பெல்லாம் வெளியாகும் படங்கள் 50 அல்லது 100 நாட்கள் ஓடினால்தான் வெற்றிப்படம் என சொல்வார்கள் ஆனால் இப்போதெல்லாம் நூறுநாள் சாதனையை படம் வெளியான ஓரிரண்டு வாரங்களிலையே செய்துவிடுகிறது. அந்த வகையில் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வட சென்னை திரைப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளா மற்றும் கர்நாடகா என அனைத்து மாநிலங்களிளுமே இந்த படம் நல்ல வசூலை கொடுத்துக்கொண்டிருக்கிறதாம், பாக்ஸ் ஆஃபிஸிலேயே இந்த படம் 5வது நாளில் மட்டுமே, இந்த பிரமான்ட வசூலை தந்திருக்கிறதாம்.
மேலும் சென்னை ரூ 7 கோடியும் தமிழகத்தில் ரூ 50 கோடியும், உலகம் முழுக்க இந்த படம் ரூ 100 கோடியையும நெறுங்கி விட்டதாம் தீபாவளிக்குள் இந்த படம் ரூ 100 கோடி யை வசூல் செய்துவிடும் என்று பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.