உதயநிதியின் அடுத்த படம் அறிவிப்பு!!



uthyanithi-next-flim

உதயநிதியின் அடுத்த படம் அறிவிப்பு!! உதயநிதி அடுத்ததாக நடிக்கும் திகில் கலந்த த்ரில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிப்பதாக கூறப்படுகிறது.

Tamil Spark

இப்படம் தூண்டில், பிரியசகி முதலிய படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

ஓஎஸ்டி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தை முடித்த பிறகு உதயநிதி மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நிமிர்’ படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை நடித்து முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.