13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
அடடே... இதுவரை யாரும் கண்டிராத ராகவா லாரன்ஸின் திருமண புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ருத்ரன் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு நடன கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
உன்னைக் கொடு என்னை தருவேன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். பின்னர் காஞ்சனா மற்றும் முனி போன்ற திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். அந்தத் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஞ்சனா மற்றும் முனி போன்ற திரைப்பட சீரியஸ்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் உருவெடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் . தீவிரமான ரஜினியின் ரசிகர் ஆன இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும் ராகவி என்ற மகளும் இருக்கின்றனர். இவரது மனைவி மற்றும் குடும்பத்தை பற்றிய புகைப்படங்கள் இணையதளத்தில் அதிகமாக வெளியாகிறது இல்லை. தற்போது இவரது திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.