தாத்தாவின் அன்பை பெற்றவர்.! தந்தையின் நண்பர்.! என்னை வழிநடத்தியவர்.! உதயநிதி உருக்கமான பதிவு.!

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் மறைவிற்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில், அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். 'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார்.
அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர்.
— Udhay (@Udhaystalin) April 17, 2021
'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு.1/2 pic.twitter.com/0LOQEVdf2K
திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு. தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம். என தெரிவித்துள்ளார்.