கொண்டாட ரெடியா.! பிறந்தநாள் ஸ்பெஷல்! சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற லெவல் சர்ப்ரைஸ்!!

கொண்டாட ரெடியா.! பிறந்தநாள் ஸ்பெஷல்! சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற லெவல் சர்ப்ரைஸ்!!


Two movie update released in simbu birthday

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிம்பு நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.

மேலும் அவரது கைவசம் தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் என பல படங்கள் உள்ளன. இந்த நிலையில் அண்மையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டது. நடிகர் சிம்பு தனது 39 வது பிறந்த நாளை பிப்ரவரி 3 ம் தேதி கொண்டாட உள்ளார்.

simbu

இந்த நிலையில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அன்று பல அறிவிப்புகளை வெளியிட பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதாவது சிம்பு பிறந்த நாளன்று அவர் நடிக்கும் பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் சிங்கிள் டிராக் அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கிள் டிராக்கும் அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.