43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
தினமும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு திரிஷாவின் உடல் எடையை பராமரிக்கும் ரகசியம் ஆகும்.
Actress Trisha Beauty: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026ல் வெற்றியடைந்து தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜயின் பதவியேற்பு விழாவில் பலரின் கவனத்தை ஈர்த்த நடிகை திரிஷா, தனது 43 வயதிலும் இளமையாக இருந்து வருகிறார். இந்த இளமைக்கு பின்னணியில் அவர் நான்கு பழக்கங்களையும் தவறாமல் கடைபிடித்து வருகிறார். அதனை நீங்களும் தெரிந்துகொண்டால் கட்டாயம் இளமை மாறாமல் இருக்கலாம்.
உணவு கட்டுப்பாடு:
ஒருதனிநபரின் அழகு என்பது முகத்தில் போடப்படும் கிரீமில் மட்டுமே இல்லை. அது நாம் சாப்பிடும் உணவிலும் அடங்கியிருக்கிறது. இதனால் தினசரி உணவில் கவனம் செலுத்தும் திரிஷா, சுவைக்காக ஜங்க் புட் எனப்படும் துரித மற்றும் நொறுக்குத்தீனி உணவுகளை சாப்பிடுவதேயில்லை. சருமத்துக்கு நன்மைதரும் புரோட்டீன், ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ள இயற்கையான உணவுகளை சாப்பிட்டு இளமையை தக்கவைக்கிறார்.
இதையும் படிங்க: உணவில் உப்பு போடுவதற்கு இது தான் காரணமா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
காலை பானம்:
ஒவ்வொரு நாளும் ஹெல்த் மிக்ஸ் பணத்துடன் திரிஷா தனது நாளை தொடங்குகிறார். காலை எழுந்ததும் சூடான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடிப்பது, கிரீன் டீ குடிப்பது அவருக்கு பழக்கம். இது உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றும். உடலை சமநிலைப்படுத்தும். உடல் சுத்தமாகும். சருமம் எவ்வித ரசாயனமும் இன்றி பளபளப்பாகும்.

சிட்ரஸ் பழங்கள்:
திரிஷாவின் டயட்டில் சிட்ரஸ் பழங்கள் எப்போதும் இடம்பெற்று இருக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடியை விரும்பி சாப்பிடுவர். இதில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும். இதனால் யூகத்தின் தசை செல்கள் புத்துயிர் பெற்று சருமம் தளர்வடையால் இருக்கும்.
உடற்பயிற்சி:
படப்பிடிப்பு, சொந்த வேலை என பிசியாக இருந்தாலும் ஜிம்முக்கு செல்வதை எப்போதும் தவிர்ப்பது கிடையாது. கடினமான உடற்பயிற்சி, நேரமின்மை என்றால் கார்டியோ என அவர் உடற்பயிற்சி செய்து வருகிறார். இதனால் உடலின் ரத்த ஓட்டம் சீராகி சருமத்துக்கு தேவையான ஆக்சிஜன், ஈரப்பதம் கிடைக்கும்.
இதையும் படிங்க: ரத்த ஓட்டம், செரிமான கோளாறுக்கு பூண்டு டீ.. சூப்பர் டிப்ஸ் இதோ.!