"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
உங்களுக்கு திருமணம் எப்போ?? நடிகை திரிஷா சொன்ன பதிலை பார்த்தீங்களா.! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதனைத் தொடர்ந்து அவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் திரிஷா ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்தார்.
இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த அவர் இடையில் சில காலங்கள் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். பின்னர் 96 படத்தின் மூலம் அசத்தல் கம்பேக் கொடுத்த திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். அப்படத்தில் அவர் கொள்ளை அழகில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவரிடம் 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு திரிஷா, இந்த கேள்விக்கு என்னால் கூட பதில் சொல்ல முடியாது. யாருடன் இருக்கிறேன், யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்தே திருமணம் அமையும். ஒருவருடன் பழகும்போது வாழ்நாள் முழுவதும் இவருடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.எனக்கு விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்த சிலர் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இல்லை. அது போன்ற திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.