சினிமா

நடிகை திரிஷாவுக்கு திருமணம்! எப்போ தெரியுமா? வெட்கத்துடன் அவரே கூறிய தகவல்.!

Summary:

trisha talk about marriage

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திரிஷா. அதனை தொடர்ந்து அவர் மனசெல்லாம்,சாமி எனக்கு 20 உனக்கு ௧௮, திருப்பாச்சி, ஆறு, பீமா அபியும் நானும், சர்வம், விண்ணைத்தாண்டி வருவாயா என்னை அறிந்தால் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

மேலும்  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திரிஷா பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 

தொடர்புடைய படம்

நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்று ரத்து செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் திரிஷா தற்போது சமீபத்தில் செய்தியாளர்களிடம்  பேட்டி அளித்துள்ளார் அதில் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், நான் இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் சரியான ஒரு நபரை சந்தித்து விட்டால் எந்த வித தயக்கமும் இல்லாமல் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement--!>