பிரபல நடிகையுடன் திருமணமா? சம்மதம் தெரிவித்த த்ரிஷாவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!



trisha said ok to marry charmi

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு  ஜோடியாக நடித்துள்ளார். மேலும்  திரையுலகில் தனக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.  

இந்நிலையில், நடிகை திரிஷா நேற்று அவரது 36-வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடினார்.அதனைத்தொடர்ந்து  அவர் நடித்த 60-வது படமான "பரமபதம் விளையாட்டு" படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும் திரைத்துறை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் த்ரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

trisha

இந்நிலையில் நடிகை சார்மி தனது ட்விட்டர் பதிவில், த்ரிஷா தன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று முழங்காலிட்டு காதலரைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார்.



 

இதற்கு பதிலளிக்கும்வகையில் நடிகை த்ரிஷா, நன்றி. நான் அதற்கு ஏற்கெனவே நான் சம்மதம் தெரிவித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.