சினிமா

என்னது..இவங்களெல்லாமா! வீட்டிலிருந்து வெளியேற நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார்னு பார்த்தீங்களா! கத்தி கூச்சலிட்ட பிரியங்கா!!

Summary:

என்னது..இவங்களெல்லாமா! முதல் முறையே வீட்டிலிருந்து வெளியேற நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார்னு பார்த்தீங்களா! கத்தி கூச்சலிட்ட பிரியங்கா!!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 பிரம்மாண்டமாக தொடங்கி நாளுக்கு நாள் பாசம், சண்டை, மோதல் என மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி நகைச்சுவைகளுக்கும் பஞ்சமில்லாமல் பார்ப்போரை கலகலப்பாக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நல்லபடியாக சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென போட்டியாளர் நமீதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு காரணம் அவர் சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் தூக்கி எரிந்ததால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார் என கூறப்படுகிறது. மேலும் சில மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் வீட்டிலிருந்து வெளியேறினார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதனை தொடர்ந்து நமிதாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யாரென ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் முதல் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் நாதியா, நிரூவ், இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்‌ஷரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனை பிக்பாஸ் அறிவித்ததும் பிரியங்கா கொளுத்திப் போடு கொளுத்திப் போடு பிக்பாஸ் என தனது பாணியில் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

 

 


Advertisement