மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
ஆமா! ஜிபி முத்து மாமாவுக்கு நான் ரெண்டாவது..! அவர் எனக்கு ஆறாவது..! ரவுடி பேபி சூர்யா வெளியிட்ட பகீர் தகவல்!

முன்பெல்லாம் பிரபலம் ஆவது என்பது மிகவும் கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரே வீடியோவில் ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக டிக் டாக் செயலி மூலம் பலர் உலகம் முழுவதும் பிரபலமாகிவருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் செயலி மூலம் பேமஸ் ஆனவர் ஜிபி முத்து. கோமாளி போல் ஏதாவது குறுக்குத்தனமாக வீடியோ செய்யும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
இவருடன் இணைந்து டிக் டாக்கில் பிரபலமாக இருப்பவர் மலேசியாவை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா. டிக் டாக் மோகத்தில் மூழ்கிப்போன சூர்யாவை அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார். முதலில் GP முத்து, சூர்யா இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துவந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் மிக நேர்க்கமாகிவிட்டனர்.
இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு நான் ரெண்டாவது மனைவி தான்.. என்று சூர்யா கூற அதை மறுக்காமல் முத்துவும் சிரித்துக் கொண்டிருக்க இந்த விவகாரம் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது.