தனது உயிரை பற்றி கவலைப்படாமல் வேலை செய்யும் தூய்மை பணியாளருக்கு பாத பூஜை! வைரலாகும் நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ..!



thuyimai-paniyalaruku-patha-pujai

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ என்னும் கொடிய அரக்கன் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நோயால் உலகம் முழுவதும் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது கொரோனா நோயானது இந்தியாவிலும் பரவியதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 4000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று தெரிவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தனது உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் உழைத்து வரும் துப்புறவு பணியாளருக்கு பெண் ஒருவர் பாத பூஜை செய்து, நெற்றியில் சந்தானம் வைத்து, மாலை அணிவித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.