சினிமா

90களில் கலக்கிய நடிகையுடன் சண்டை போட்டுக்கொள்ளும் நடிகை திரிஷா - காரணம் என்ன தெரியுமா?

Summary:

thirisha-simran-sugar-fight sean

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தற்போது முன்னணி நடிகைகளாக கொடிகட்டி பார்ப்பவர்கள் சிம்ரன் மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் முதன்முதலாக ஜோடி படத்தில் இணைந்து நடித்தனர். அதனை தொடர்ந்து சமீபத்தில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 

இந்நிலையில் திரிஷா, சிம்ரன் இருவரும் மீண்டும் இணைந்து சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிம்ரனும், திரிஷாவும் சகோதரிகளாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

trisha with simran க்கான பட முடிவு

மேலும் இப்படத்தில் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் போன்றோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.மேலும் சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வரும் இப்படத்திற்கு சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் ஒரு காட்சியில் சிம்ரன் மற்றும் திரிஷா  இருவரும் தண்ணீருக்கு அடியில் சண்டை போட்டுக் கொள்வது  போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாம். அதற்காக இவர்கள் இருவருக்கும் சிறப்பு பயிற்சிகள் எல்லாம் கொடுக்கப்பட்டு அச்சண்டைக்காட்சி எடுக்கப்படுவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு சுகர் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement