தேவர் மகன்-2 வில் தல அஜித்; வெளியான போஸ்டரால் மிகப்பெரிய உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

தேவர் மகன்-2 வில் தல அஜித்; வெளியான போஸ்டரால் மிகப்பெரிய உற்சாகத்தில் ரசிகர்கள்.!!


thevarmakan-2--kamalakasan-with-thala-ajith

ஹாலிவுட்,  பாலிவுட் திரைப்படங்களை போன்று தமிழ் சினிமாவிலும் பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படங்கள் தற்சமயம் பாகம்1 ,பாகம் 2 என சமீப காலங்களில் வெளிவருவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் 1992 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்த தேவர் மகன் 5 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனால் இப்படத்தை இரண்டாம் பாக எடுக்க நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார் என்று தெரிகிறது. சமீபத்தில் கூட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமலஹாசன் தேவர்மகன் 2 விரைவில் தயாராக இருக்கிறது என்ற தகவலை பதிவு செய்தார்.

Tamil Spark

இதனால் கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் இதற்கிடையே தேவர் மகன் 2 வில் தல அஜித் குமார் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கமலும் அஜித்தும் இணைந்து இருக்கும் தேவர்மகன் 2 போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர்களை கமல் அஜித் ரசிகர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

16 வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த தேவர்மகன் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த தந்தை கேரக்டரில் நடிகர் கமலஹாசனும் கமல் நடித்த மகன் கதாபாத்திரத்தில் தல அஜித் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.