சினிமா

சூரரை போற்று ஓடிடியில் வெளியாகிறதா? நடிகர் சூர்யாவிற்கு எதிராக கிளம்பும் கடும் எதிர்ப்புகள்! எதனால் தெரியுமா?

Summary:

Theatre owner protest against surya to release his movi in OTT

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அப்படத்தை அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக சூர்யா அறிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்பிரமணியம், கொரோனாவால் தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். சினிமாதுறையும் பெரும் நெருக்கடியில் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் சூர்யா எடுத்துள்ள இந்த தவறான முடிவு தியேட்டர்களை நிரந்தரமாக மூட வழிவகுத்துவிடும் எனவும்,

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர்,  விரைவில் சகஜ நிலை திரும்பி தியேட்டர்கள் திறக்கப்படும். இந்நிலையில் சூர்யா திரையுலகுக்கு தவறான வழியை காட்ட வேண்டாம். அவர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். 


Advertisement