"2023ம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கிய டாப் ஐந்து நடிகைகள் லிஸ்ட்.. யார் யார் தெரியுமா.?"

"2023ம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கிய டாப் ஐந்து நடிகைகள் லிஸ்ட்.. யார் யார் தெரியுமா.?"


The list of top five highest paid actresses of 2023 is out!

2023ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் டாப் 5 நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாகவே சினிமா நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வி நம்மிடம் உள்ளது.

nayanthara

மேலும் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் லட்சத்தில் சம்பளம் வாங்குவார்களா அலலது கோடியில் வாங்குவார்களா என்ற கேள்வியும் நம்மில் பலருக்கு இருக்கும். தற்போது டாப் 5 நடிகைகளை இங்கு பார்ப்போம். 2005ம் ஆண்டு அறிமுகமாகி தற்போது தமிழின் முன்னணி நாயகியாக இருப்பவர் நயன்தாரா.

இவர் தற்போது 10கோடி வரை சம்பளம் பெருகிறாராம். இதையடுத்து தமன்னா 2006ம் ஆண்டு தமிழில் அறிமுகமாகி, தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் 7 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சமந்தா 4கோடி வரை பெறுகிறாராம்.

nayanthara

90களில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் த்ரிஷா. சில வருடங்களாக மார்க்கெட் சரிந்திருந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தவர், 5கோடி வாங்குகிறார். இதையடுத்து கீர்த்தி சுரேஷ் 3கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.