சினிமா

காதலி சனம் ஷெட்டியுடன், ஜோடியாக தர்ஷன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

Summary:

Tharshan saw cheran movie preview with sanam shetty

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால்  அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் கமலே பிக்பாஸ் இறுதி மேடையில் அவருக்கு பட வாய்ப்பு அளித்து அவரை வாழ்த்தினார்.

 அதனை தொடர்ந்து பிக்பாஸ் முடிந்த நிலையில் தர்ஷன் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டியுடன்,  சேரன் குடும்பத்துடன் இணைந்து சேரன்  நடித்த ராஜாவுக்கு செக் என்ற படத்தின் பிரிவியூ ஷோவினை  கண்டு மகிழ்ந்துள்ளார்.இந்நிலையில் அப்புகைப்படத்தை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 


Advertisement