சினிமா

இப்படியொரு பாசமா!! கேப்டன் பாதவிக்கான டாஸ்க்.! தர்சன் செய்த செயலால் கொந்தளித்துப்போன லாஸ்லியா!! வீடியோ இதோ!

Summary:

tharsan help losliya to win the task

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். 

கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார். 

Image result for Bigg Boss 3 - 9th September 2019 | Promo 1

இந்நிலையில் இன்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் வனிதா, தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த டாஸ்கில் முதலில் வனிதா தன்னால் இதை செய்ய முடியவில்லை என்று விட்டுவிட்டு செல்கிறார். 

அதன் பின்னர் தர்ஷனும் தனது தங்கைக்காக விட்டுக்கொடுத்து தன்னால் முடியவில்லை என்று விட்டுவிட்டு செல்கிறார். இந்நிலையில் லாஸ்லியா தர்ஷனிடம் சென்று ஏன் இப்படி விட்டுக்கொடுத்தாய், எனக்கு சத்தியமாய் இது வேண்டாம் என்று கோபமாக பேசுகிறார். இந்த பிரமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement