இந்த தடவையாவது இம்ப்ரெஸ் பண்ணனும்! செம ஹேப்பியில் நடிகர் தனுஷ்! ஏன்? யாரை சொல்கிறார்னு பார்த்தீர்களா!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ். அதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்ததாக ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் தனுஷ் கைவசம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என செம பிசியாக உள்ளார். மேலும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கி மாபெரும் வரவேற்பை பெற்ற புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கவுள்ளது. இதன் பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோரும் இந்த படத்தில் இணைகின்றனர்.
Selvaraghavan + yuvan + aravind krishna.. well well ... right where I started. Very happy to join my maker , my creator and the only reason I’m here today my brother @selvaraghavan again. I hope this time Atleast I impress him 🙏🙏
— Dhanush (@dhanushkraja) December 23, 2020
இந்நிலையில் நடிகர் தனுஷ் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் எங்கே தொடங்கினேனோ அங்கேயே மீண்டும் இணைக்கிறேன். நான் இங்கே இருப்பதற்குக காரணமான தயாரிப்பாளர் , என்னுடைய படைப்பாளி, எனது சகோதரர் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை இம்ப்ரஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்