அடேங்கப்பா.. தனுஷ் காட்டில் செம மழைதான்! வெளியான வேற லெவல் அறிவிப்பு! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அடேங்கப்பா.. தனுஷ் காட்டில் செம மழைதான்! வெளியான வேற லெவல் அறிவிப்பு! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!thanush-going-to-act-in-a-telungu-director-movie

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

மேலும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது கைவசம் எக்கச்சக்கமான திரைப்படங்கள் உள்ளன.

இவ்வாறு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என செம பிஸியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக டோலிவுட்டிலும் களமிறங்க உள்ளார். அதாவது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.