நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் காத்திருக்கும் புது ட்விஸ்ட்! இது நடக்குமா? தீயாய் பரவும் தகவல்!!
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் காத்திருக்கும் புது ட்விஸ்ட்! இது நடக்குமா? தீயாய் பரவும் தகவல்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர்ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வருகிறார். நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு உடன்பாடு இல்லை எனவும், இருவரையும் சேர்ந்து வாழ சமாதானம் செய்ததாகவும் தகவல்கள் பரவியது. ஆனாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் அண்மையில் ஆரியபுரத்தில் தாங்கள் ஒன்றாக வசித்து வந்த ஃபிளாட்டிற்கு தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ரகசியமாக வந்து செல்வதாகவும், சந்திப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு ஐஸ்வர்யா தனக்கு கால அவகாசம் வேண்டும் என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இருவரும் தங்களது மகன்களுக்காக சேர்ந்து வாழ்வர் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.