50 ஆண்டுகளை நிறைவு செய்தது சிவாஜி கணேசனின் தங்கப்பதக்கம் திரைப்படம்..!



Thangappathakkam Movie completed 50 years 

 

பி மாதவன் இயக்கத்தில், மெல்லிசை மன்னன் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், சிவாஜி ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 01ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் தங்கப்பதக்கம் (Thangappathakkam). 

தங்கப்பதக்கம் திரைப்படம்

சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன், சோ, சுருளி ராஜன், மனோரமா மற்றும் பிரமீளா உட்பட பலரும் நடித்த திரைப்படம், அன்றைய நாளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 74 காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த தங்கப்பதக்கம் திரைப்படம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: Surya 44: சூர்யா 44 படத்தில் இணைந்த பூஜா ஹெட்ஜ், ஜெயராம், கருணாகரன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

காலத்தால் அழியாத காவியம்

தமிழில் இப்படம் 175 நாட்களை கடந்து ஓடியது. நேர்மையான காவல் அதிகரிக்கும் - நேர்மையை எதிர்க்கும் நபருக்கும் இடையேயான கதையில் பாசம் - பந்தம் என பல தனித்துவத்துடன் உருவான படம் காலங்கள் கடந்து ரசிக்கப்படும் காவியம். இப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கண்டு ரசிக்க

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு விழா; மாஸ் உடையுடன் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த கமல்.! வீடியோ உள்ளே.!