தமிழுக்கு மாஸ் ரீஎன்ட்ரி கொடுக்கப் போகும் தமன்னா- சன் பிக்சர்ஸ் வெளியிட்ட  சூப்பர் அப்டேட்

தமிழுக்கு மாஸ் ரீஎன்ட்ரி கொடுக்கப் போகும் தமன்னா- சன் பிக்சர்ஸ் வெளியிட்ட  சூப்பர் அப்டேட்


thamanna-team-up-with-superstar-for-jailer

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த கல்லூரி என்ற திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது . அதனைத் தொடர்ந்து தமிழில் முக்கிய நட்சத்திரங்களுடன்  இவர் நடித்த படிக்காதவன்  அயன், பாகுபலி, தர்மதுரை   போன்ற திரைப்படங்கள்  இவரை முன்னணி கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்த்தியது.

அதன் பிறகு இவருக்கு தமிழில்  மார்க்கெட் குறைய தொடங்கியது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார் தமன்னா.


Jailer
தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு மெகா ரீஎன்ட்ரி  கொடுக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ஜெய்லர். இந்தப் படத்தில்  கன்னடம் மலையாளம் தெலுங்கு என  நான்கு மொழிகளை சார்ந்த  முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் இந்தப் படமானது வருகின்ற ஏப்ரல் மாதம் ரசிகர்களுக்கு விருந்தாக  வர இருக்கின்றது. தற்போது இந்த படத்தில்  தமன்னாவும் இணைய இருப்பதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது  சன் பிக்சர்ஸ் .
Jailer
நேற்றுதங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள சன் பிக்சர்ஸ் அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல்களை  அறிவிக்கவில்லை. பெரும்பாலும் அவர் கதாநாயகியாக தான் நடிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நான்கு வருடங்களுக்குப் பிறகு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் தமன்னா தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என கணிக்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.