ஷமி பாய்.. பிரபல இந்திய கிரிக்கெட் வீரரிடம் தளபதி ரசிகர்கள் என்ன கேட்டுள்ளனர் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!



thalapathy-fan-ask-beast-update-to-player-mohamed-shami

தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா,டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் அண்மையில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் கலக்கி வருகிறது. பின்னர் படத்தின் டீசர், பாடல் வெளியீட்டு விழா குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி ரசிகர்கள் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளனர். 

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அங்கு நேற்றைய ஆட்டத்தின் போது பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த இந்திய வீரர் முகமது ஷமியிடம் ரசிகர்கள் பீஸ்ட் பட அப்டேட் கேட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதேபோல கடந்த ஆண்டு சென்னையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்டனர்.