கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு ஜூனில் தொடங்க ஏற்பாடு?.. வெளியான தகவல்.!

டிவிவி ப்ரொடெக்சன் தயாரிப்பில், இளைய தளபதியின் 69 வது படம் தயாராகவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் அரசியலில் முழுவீச்சில் களமிறங்குவர் என கருதப்படுவதால், படத்திற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய நிலையில் தளபதி 68 வெங்கட் பிரபுவுடன் இணைந்து GOAT தயாராகிறது. இப்படத்தின் வெளியீடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேவேளையில், விஜய் இயக்குனர் எச்.வினோத்துடன் கைகோர்த்து தனது 69 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, டிசம்பர் 2024 க்குள் அவை நிறைவுபெறும் என கணிப்பட்டுள்ளது. 2025 மே அல்லது ஜூன் மாதத்தில் படம் வெளியாகலாம். தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்த எச்.வினோத் விஜயுடன் இணையும் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.