அட.. தளபதி 67 படத்திற்கு இப்படியொரு வித்தியாசமான டைட்டிலா.! ரசிகர்களின் கவனம் ஈர்த்த மிரட்டலான டீசர்!!

அட.. தளபதி 67 படத்திற்கு இப்படியொரு வித்தியாசமான டைட்டிலா.! ரசிகர்களின் கவனம் ஈர்த்த மிரட்டலான டீசர்!!


Thalapathi 67 movie title video announced

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தநிலையில் 'தளபதி 67' படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு சோனி மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே போஸ்டர் வெளியிட்டிருந்தது. அதன்படி தற்போது படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பின்னணியில் ஆங்கிலத்தில் பாடல் ஒலிக்க விஜய் சாக்லேட் தயார் செய்கிறார். மேலும் அந்த காட்சிகளுக்கு இணையாகவே கூர்மையான கத்தியையும் தயாரிக்கிறார். விறுவிறுப்பான இந்த வீடியோவின் இறுதியில் அவர் ப்ளடி ஸ்வீட் என கூற படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுகிறது. தளபதி 67 படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.