சினிமா

என்னது.. விஜய்யின் தளபதி 65 படத்தின் டைட்டில் இதுதானா! இணையத்தில் கசிந்த தகவல்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஜய் மாஸ்டர் த

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இது தளபதியின் 65வது திரைப்படமாகும். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. 

தள்ளி போகும் தளபதி 65 படப்பிடிப்பு.... விஜய் எடுத்த முக்கிய முடிவு...  சிறப்பான சம்பவம்! | Thalapathy 65: Vijay Takes A Major Decision; The  Project To Get Delayed - Tamil Filmibeat

அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வந்தநிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தளபதி 65-வது படத்துக்கு டார்கெட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தலைப்பு உண்மைதானா என்பதை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும் விஜய்யின் பிறந்தநாளான வரும் 22-ந் தேதி தளபதி 65 படத்தலைப்பு அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement