தமிழகம் சினிமா

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் போலீசாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார்; வைரலாகும் புகைப்படங்கள்.!

Summary:

thalaivar 167th movie - ar muruga dass - rajinikanth

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் முருகதாஸ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். 

பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் இந்தப் படத்தில ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், இசையமைபபாளராக அனிருத்தும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

 

ரஜினியின் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் மெகா கூட்டணி இணைந்துள்ள சந்தோசத்தில் இருக்கும் இயக்குநர் முருகதாஸ் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சமீபத்தில் பழநி முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு போட்டோஷூட் நடைபெற்ற போது அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரி உடையணிந்து கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றன.


Advertisement