சினிமா

எதையும் மறக்க மாட்டோம்! விஜய் ரசிகர்கள் உருக்கமாக ஒட்டியுள்ள போஸ்டர்!

Summary:

Thalaiva movie 6th year celebration

இந்திய அளவில் பிரபலாமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்து நதிவருகிறார் விஜய்.

படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாக்கி பல்வேறு சர்ச்சைகளுடனும், எதிர்ப்புகளுடனும் வெளியான தலைவா படம் வெளியாகி இன்றுடன் 6 வருடங்கள் ஆகிறது. தலைவா படம் வெளியாவதில் இருந்த பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகள் அனைத்தும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் படம் வெளியாகி 6 வருடம் ஆன நிலையில் அதை தலைவா டே என விஜய் ரசிகிர் பதிவிட்டு வருகின்றனர். #ThalaivaaDay #6YearsOfThalaivaa என்ற ஹாஸ்டேக்கில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது பற்றி உருக்கமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.

 


Advertisement